திருச்சி மத்திய சிறையில் 2 கைதிகள் தப்பி ஓட்டம்
திருச்சி, பிப்.28 திருச்சி மத்திய சிறையில் 2 கைதிகள் தப்பி ஓட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வடிவேல் (35), முருகானத் தம்(38). இவர்கள் இருவ ரும் தஞ்சாவூர் மாவட் டத்தில் நடந்த திருட்டு வழக்கில் கைதாகி, தண்டனை கைதிகளாக திருச்சி மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர்.
இந்நிலையில் இரு கைதிகளும் நேற்று காலை சிறை வளாகத்திலுள்ள தோட்டத்தில் வேலை செய்து வந்தனர் மதியம் 3 மணியளவில் கைதிகளின் இருப்பு விவரம் குறித்து சிறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, வடிவேல், முருகானந்தம் ஆகியோர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது தப்பியோடியதாக தெரிகிறது. இதுகுறித்து கே.கே நகர் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் திருச்சி காவல்துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.