மணப்பாறையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்

0 119
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 3  திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணப்பாறையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் மகப்பேறு மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை உடனே நியமிக்க வேண்டும், பொன்னணியாறு அணையை மேம்படுத்தி விவசாயிகளின் நலன் காத்திட வேண்டும், மணப்பாறை சிப்காட் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.‌ வீடில்லாத அனைவருக்கும் வீட்டுமனைப்பட்டா, அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடு கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.