சிறுகனூரில் திமுக மாநில மாநாடு பணிகள் : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
திருச்சியில் திமுக மாநில மாநாடு நடைபெற உள்ள இடத்தை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் வரும் மார்ச் 9-ஆம் தேதி ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்கிற தலைப்பில் தி.மு.க-வின் மாநில மாநாடு நடைபெற உள்ளது.
சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இங்கு மாநாட்டுத் திடல் மற்றும் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட உள்ளது மேலும் பாதுகாப்பு வசதிகள் மேலும் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால், அவர்களுக்கான உணவுக்கூடங்கள், குடிநீர் வசதிகளை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று மாநாட்டுத் திறலை திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் கே என் நேரு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கினார்.
மேலும் மாநாட்டிற்கு வரும் கட்சியினருக்கு செய்ய வேண்டிய உணவு,குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்து தருவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.
தொடர்ந்து திருச்சி மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினத்துடன் மாநாட்டு திடலில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் போக்குவரத்தை சரி செய்வது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.