மற்ற மொழிகளை திணிப்பதை எதிர்ப்பது எங்கள் வேலை : அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

0 123
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 4  தேவையில்லாமல் மற்ற மொழிகளை திணிப்பதை எதிர்ப்பது எங்கள் வேலை – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

திருச்சி பொன்மலைப்பட்டி சூசையப்பர் ஆலய கூட்டரங்கில் பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசுகையில்,

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய கோட்டை மேலாளர் அலுவலகத்தில் உள்ள நுழைவு வாயிலில் ஹிந்தியில் எழுதி இருப்பது குறித்து முதலமைச்சர் கண்டனம் தெரிவித்ததை கேள்வி எழுப்பிய பொழுது அதன் விவகாரம் முழுமையாக தெரியாது என தெரிவித்தார்

தொடர்ந்து அண்ணாமலை ஹிந்திஎதிர்ப்பு புளித்துப் போன காமெடி என கூறி உள்ளார் என்ற கேள்விக்கு தமிழகத்தின் செண்டிமெண்ட் மொழி மற்றும் கல்வி ஆகிய இரண்டு தூண்களைச் சார்ந்ததுதான் என்று கூறினார்.

1937, 1965 மற்றும் 80-களில் நடந்த மொழிப்போராட்டங்களைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழகம் எப்போதும் இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதை வலியுறுத்தினார்.

உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கைகள் ஹிந்தியில் வரும்போதெல்லாம், தமிழக முதல்வர் அதற்கு முதல் ஆளாகக் குரல் கொடுத்ததாக கூறினார்

மேலும் எங்களுக்கான வேர் தமிழ் மொழி, உலகத்தோடு தொடர்பு கொள்ள உதவும் பாலம் ஆங்கில மொழி. இதுவே எங்களுக்குப் போதுமானது. தேவையில்லாமல் மற்ற மொழிகளைத் திணிப்பதை எதிர்ப்பது எங்களது வேலை
தமிழ்நாட்டின் செண்டிமெண்ட் கல்வி மற்றும் மொழி அரசியலே அதை மையப்படுத்தி தான் உள்ளது. அதை உயரத் உயர்த்திப் பிடிக்க உயர்த்திப் பிடிக்க தான் எங்களுடைய வலு தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும் என நாங்கள் வலுப்பெற கூடாது என்பதற்காக அண்ணாமலை அவர் அப்படி கூறுகிறார் என்று தெரிவித்தார்.

விஜய்யின் இலவசக் கல்வி அறிவிப்பு “2 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருப்பவர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி இலவசம்” என்று தவெக தலைவர் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு:  தான் இப்போதுதான் சென்னையில் இருந்து வந்திறங்கியதால், அவரது பேச்சை இன்னும் முழுமையாகக் கேட்கவில்லை என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.