வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலை மறியல்

0 128
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 4  வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு திருச்சி மாவட்ட மையம் சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25 ந் தேதி முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தினமும் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.இந்தப் போராட்டத்தில் திருச்சி மாவட்டத்திலிருந்து ஏராளமான வருவாய் துறை சங்க நிர்வாகிகள்,ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று வருவாய் துறையினர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பிறகு தகவல் இருந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் 250க்கும் மேற்பட்டவர்களை போலீசார்கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் பல்வேறு பணிகள் பாதிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.