மண்ணச்சநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

0 153
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 4 மண்ணச்சநல்லூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த கொள்ளை முயற்சியில் கொள்ளையர்கள் பெட்டகத்தை திறக்க முடியாததால் ரூ. 12 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணம் தப்பியது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் என்.எஃப் ரோடு பகுதியில் உள்ள வாணிக வளாகத்தில் முதல் தளத்தில் TYSPL 49 மண்ணச்சநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கயில் மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நகைக்கடன் வேளாண்மை கடன் மற்றும் தங்களது தேவைகளுக்கு ஏற்ப தங்கநகைகளை அடமானம் வைத்து ரூ.12 கோடிக்குமேல் கடன் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை அலுவலகத்திற்கு வந்து பார்க்கும் பொழுது வங்கியின் முன்பக்க கேட் பூட்டு உடைக்கப்பட்டும் மேலும் சிசிடிவி கேமரா மற்றும் அலாரம் ஒயர்கள் துண்டிக்கப்பட்டு இருப்பது அறிந்த கூட்டுறவு வங்கி பணியாளர்கள் மண்ணச்சநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் வங்கியின் நகைகள் வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு பெட்டகத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர் ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது.
இதனால் 12 கோடி மதிப்புள்ள நகைகள் தப்பியுள்ளன.
மேலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர்.

இதனிடையே மக்கள் நடமாட்டும் உள்ள இப்பகுதியில் நடைபெற்ற கொள்ளை முயற்சி சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கூட்டுறவு வங்கியில் இதுவரைக்கும் மூன்று தடவை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்..

Leave A Reply

Your email address will not be published.