திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சரை வரவேற்ற அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி, மார்ச் 9 திருச்சியில் திமுக 12 ஆவது மாநில மாநாடு இன்று மாலை சிறுகனூரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தனர். திருச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு சால்வை அணிவித்து நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வரவேற்றார்.