உழவர் சந்தை பகுதியில் கட்டப்பட்டுள்ள சிட்டிகிளப் மையம் : அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
திருச்சி, மார்ச் 10 திருச்சி மாநகராட்சிக்குட்பட் அண்ணாநகர் உழவர் சந்தை பகுதியில் மாநில நிதிக்குழு ஊக்கநிதி மற்றும் மாநகராட்சி பொதுத்துதிட்டத்தின் கீழ் ரூ.5.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிட்டிகிளப் மையத்தை நகராட்சிநிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்தவர்களுக்கு அதற்கான ஆணையை வழங்கி உரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.