மதுபான கடையில் தகராறு : வாலிபரை தாக்கிய இருவர் கைது

0 99
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 10 திருச்சி திருவரங்கம் பனையபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது26) இவர் கொண்டையம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு மதுபான கடைக்கு மது அருந்த சென்றுள்ளார். அப்போது அங்கு மது அருந்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும்அருண்குமாருகும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் மீண்டும் இரவு 12 மணி அளவில் அருண்குமாரின் இருசக்கர வாகனத்தை மறித்து அவரை தகாத வார்த்தைகளை திட்டியும் கல்லால் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அருண்குமார் திருவரங்கம் போலீஸ் நிலையத்தில். புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொண்டையம்பேட்டை பகுதியைச் சேர்ந்தநவீன் ராகுல் (வயது24), சிவா (வயது40)ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தேவா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.