தேர்தல் பரப்புரையை தொடங்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்.

0 94
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன் ஆணையடியான் கருப்புசாமி கோயிலில் சிறப்பு பூஜை செய்து தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.

லால்குடி சட்டமன்ற தொகுதியில் வருகின்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் மதன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.இந்நிலையில் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் முதுவத்தூரில் உள்ள அருள்மிகு ஆணையடியான் கருப்புசாமி கோயிலில் கட்சி நிர்வாகிகளுடன் இன்று சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் முடித்துவிட்டு தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.தொடர்ந்து வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

இந்த பரப்புரையில் லால்குடி, புள்ளம்பாடி ஒன்றிய நாதக மாநில,மாவட்ட,தொகுதி,கிளை மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.