முசிறியில் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்வாகிகள் – இணைப்பு விழா

0 75
Stalin trichy visit

முசிறியில் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்வாகிகள் – இணைப்பு விழாவில் அதிமுக மாவட்ட செயலாளர் பரஞ்சோதி , முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம், முசிறியில் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முசிறி பகுதியில் ஓபிஎஸ் அணியில் பொறுப்பு வகித்த நகர செயலாளர் பேங்க்.ராமசாமி. நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் கடலை ராஜா, சண்முகம், வினோத், மாவட்ட பிரதிநிதி குமரவேல், நகர்மன்ற உறுப்பினர் கவிதா ராம்பிரகாஷ் மற்றும் பலர் அதிமுக மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் ராஜமாணிக்கம், ஜெயம், ஜெயராமன்,
நகர செயலாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.
முசிறி நகர செயலாளர் ஸ்வீட் ராஜா என்கின்ற மாணிக்கம் அலுவலகத்தில் நடைபெற்ற இணைப்பு விழாவில் நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஓபிஎஸ் அணி உறுப்பினர்கள், நிர்வாகிகள், அதிமுகவினர் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.