வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் படங்களை மறைக்கும் பணி

0 71
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 16  மணப்பாறையில் பறக்கும் படை வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் திறப்பு.

தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தேர்தல் பணிகள் மிகத் தீவிரமடைந்துள்ளன. மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள சிறப்புப் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள முதல்வர் படங்களை மறைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, அனைத்துப் பறக்கும் படை வாகனங்களிலும் அதிநவீன ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.