திருச்சி ஜி.வி.என். மருத்துவமனையில் ரேடியோ பிரீக்வன்சி அப்லேஷன் நவீன சிகிச்சை முறை அறிமுகம்

0 203
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 17 திருச்சி ஜி.வி.என். மருத்துவமனையில் ரேடியோ பிரீக்வன்சி அப்லேஷன் நவீன சிகிச்சை முறை அறிமுகம் .

இது குறித்து டாக்டர் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனை சேர்மன் டாக்டர் கோவிந்தராஜ் நிருபர்களிடம் கூறியது:
தென் தமிழகத்தில் முதல் முறையாக சாதாரண கட்டி மற்றும் புற்றுநோய் கட்டிகளை ஆர்எப்ஏ நவீன சிகிச்சை முறையில் அகற்றுவதற்கான கருவி டாக்டர் ஜி. விஸ்வநாதன் மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டது. தைராய்டு, நுரையீரல், புற்றுநோய் கட்டிகள், மற்ற இடங்களில் பரவியுள்ள புற்றுநோய் கட்டிகளை அறுநைவ சிகிச்சை மற்றும் தழும்பு இல்லாமல் எண்டோஸ்கோப்பி மூலம் கதிர்வீச்சு அதிர்வெண்களை பயன்படுத்தி அகற்றும் கதிர்வீச்சு அதிர்வெண் அப்லேஷன் (RFA) சிகிச்சை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த வகை சிகிச்சை மருத்துவ துறைக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை என்றார்.

இது குறித்து குடல்நோய் சிகிச்சை டாக்டர் ராதாகிருஷ்ணன், நுரையிரல் நோய் சிகிச்சை டாக்டர் ராஜ்திலக் ஆகியோர் கூறியது: குடல், கல்லீரல், கணையம், வயிறு, பித்தநாளம், பெருங்குடல் அடிப்பகுதி உள்ளிட்ட இடங்களில் உள்ள சாதாரண கட்டி மற்றும் புற்றுநோய் கட்டிகளை கதிர்வீச்சை பயன்படுத்தி மிகவும் அதிக சூட்டில் அகற்றலாம். ஓபன் அறுவை சிகிச்சையை தவிர்த்து எண்டோஸ்கோபிக் மூலம் அறுவை சிகிச்சை செய்வதால் சிகிச்சை முடிந்த உடன் நோயாளி வீட்டிற்கு சென்றுவிடலாம். நோயின் தன்மையை பொறுத்து ஹீமோதெரபி சிகிச்சை பரிந்துரைக்கப்படும். இதே போல ப்ரோன்ஸ்கோப்பிக் கருவியை பயன்பபுத்தி நுரையீரல் கட்டிகளை பாதுகாப்பாக அகற்றலாம். வயதான காலத்தில் அறுவை சிகிச்சை செய்ய முடியாதவர்களுக்கு இந்த சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர். நிகழ்ச்சியில் டாக்டர்கள் சீனிவாசன், ஜவஹர் நாகசுந்தரம், செந்தில், விஸ்வநாதன், முத்துராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.