முசிறியில் ரூ.80,000 பறிமுதல் : தேர்தல் பறக்கும்படையினர் நடவடிக்கை

0 192
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 18 முசிறி அருகே சீலைபிள்ளையார் புதூர் பகுதியில் முறையான ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூபாய் 80 ஆயிரம் பறிமுதல்.. முசிறி தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை..

திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டுப்புத்தூர்
சீலைபிள்ளையார்புதூர் பிரிவு ரோடு அருகே முசிறி சட்டமன்றத் தொகுதி பறக்கும் படையினர் சுமித்ரா தலைமையில் காவல்துறையினருடன் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது சீலைபிள்ளையார்புதூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் பழனிகுமார் அப்பகுதியில் இருந்து ஆம்னி வேனில் அவ்வழியாக சென்றவரை நிறுத்தி சோதனை செய்ததில் முறையான ஆவணங்கள் இன்றி ரூபாய் 80,000
வைத்திருந்ததை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர், இத்தொகையை முசிறி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் லோகநாதனிடம் ஒப்படைத்தனர், ஆம்னி வேனில் வந்த பழனிகுமார் காட்டுப்புத்தூர் மளிகை கடைக்கு அரிசி வாங்க தொகை எடுத்த சென்றதாக கூறி மனு அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.