மலைக்கோட்டை கோயிலில் பக்தர்களிடம் வாக்குப்பதிவு விழிப்புணர்வு

0 223
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 27 மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக் கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனத்துக்கு வந்த பக் தர்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதேபோல், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு சட்டப் பேர வைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களிலும் விழிப் புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றன. திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் கன்டோன்மென்ட் கேம்பியன் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்களை கொண்டு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மனிதச்சங்கிலி நடத்தப்பட்டது.

விழிப்புணர்வு பேரணி: திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் குறைவான வாக்கு பதிவு நடைபெற்ற பகுதியான பொன்மலைப்பட்டி பகுதியில் வார்டு 46 அலுவலகம் முதல் பொன்மலைப்பட்டி பேருந்து நிலையம் வரை வாக் களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் தேர்தல் விழிப்பு ணர்வு பதாகை வைக்கப்பட்டு பக்தர்களுக்கு துண்டுப் பிரசு ரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

துண்டுப் பிரசுரங்கள்: தனியார் ஜவுளி கடையில் தொழிலாளர் நலத் துறையின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டு பணியாளர்கள் மற்றும் வாடிக்கை யாளர்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி பணியாளர் கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் வரை தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செல்பி புகைப்பட இடம் அமைத்து, அதில் நின்றபடியே தங்களது கைப்பேசியில் புகைப்படம் எடுத்து மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சீதாலட்சுமி ராமசுவாமி கல் லூரியில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சுப் போட்டி மற்றும் நாடகம் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.