திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ப.குமாருக்கும் உற்சாக வரவேற்பு

0 178
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 28  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்திற்கு இன்று வருகை தந்த திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் ப.குமாருக்கு நிர்வாகிகள் பொன்னாடைகள் போர்த்தியும், மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து வேட்பாளர் ப.குமார், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.‌ இந்நிகழ்வில் மணப்பாறை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர்.விஜயகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.