மணப்பாறை த.வெ.க. வேட்பாளர் அறிவிப்பு : கட்சியினர் கொண்டாட்டம்

0 229
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 30  மணப்பாறையில் தவெக வேட்பாளர் அறிவிப்பிற்கு நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தேர்தல் களம் களை கட்டியுள்ளது. இதில் வேட்பாளர்கள் ஒவ்வொரு கட்சியிலும் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் அதை கட்சி நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி மணப்பாறை தொகுதியில் போட்டியிட தவெக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கதிரவன் அறிவிக்கப்பட்ட நிலையில் அக்கட்சி நிர்வாகிகள் பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்து மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அதிமுக வேட்பாளர் டாக்டர் விஜயகுமாரை பார்த்து தங்களின் கட்சி கொடியை காட்டி கையை அசைத்து வாக்கு சேகரித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.