வாக்களிக்கும் கடமை ஆற்றுவோம் : மக்கள் சக்தி இயக்கம் பிரச்சாரம்

0 79
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 30  “வாக்களிக்கும் கடமை ஆற்றுவோம்: பணத்துக்கு வாக்களிக்கும் மடைமை மாற்றுவோம்”.என திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் பிரச்சாரம்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மாணவிகளியிடம் அனைவரும் வாக்களிக்களியுங்கள். பணம், பொருள் வாங்கிக் கொண்டு வாக்களிக்கக் கூடாது என்பதை விழிப்புணர்வு பரப்புரை ஏற்படுத்தப்பட்டது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் “எனது வாக்கு எனது உரிமை” “என் வாக்கு விற்பனைக்கு இல்லை” போன்ற வாசகம் மற்றும் “வாக்களிக்கும் கடமை ஆற்றுவோம்”, “பணத்துக்கு வாக்களிக்கும் மடைமை மாற்றுவோம்”. என்கிற வாசகம் உள்ள ஸ்டிக்கரை ஒட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம் 30.03.26, காலை 10.00 மணிக்கு மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் தலைமையில் நடந்தது.

மக்கள் சக்தி இயக்க மாநில துணைச்செயலாளர் ஆர்.இளங்கோ மாணவிகளிடம் “யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். ஆனால் பணமோ, பொருளோ வாங்கிக் கொண்டு வாக்களிக்காதீர்கள், அது, ஊழலுக்கு துணைபோகும் செயல் என்பதுடன், ஊழல் பணத்தில் பங்கு பெறும் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பதற்கு சமமான செயல் ” என எடுத்துரைத்தார்.

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் தொடந்து மக்கள் அதிகம் கூடும் பொது இடமான விளையாட்டு மைதானம், படிப்பக மன்றம், சந்தை, வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் நடைபயிற்சி செல்லும் மக்களிடமும் பிரச்சாரம் செய்ய உள்ளோம்.
நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் செந்தில், ஆர். சுமன், சுதன், குமரன், சந்திரசேகர், தாமு வெங்கடேஷன், மகளிர்கள் மற்றும் பலர் கலந்துக் கொண்டார்கள்

Leave A Reply

Your email address will not be published.