திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி, மார்ச் 30 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திருச்சியில் முதல் ஆளாக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து தில்லை நகர் பகுதியில் இருந்து மாலை 4:30 மணி அளவில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
தில்லைநகர் முதலாவது குறுக்குத்தெரு, ஐந்தாவது குறுக்கு தெரு, மூவேந்தர் நகர், செங்குலத்தான் கோவில் தெரு, ரகுமானியபுரம், 80அடி சாலை, வடவூர், வாமடம் உள்ளிட்ட பகுதிகளில், பிரச்சார வாகனத்தில் அமர்ந்தவாறு பொதுமக்களிடம் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன், மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.