திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் அமைச்சர் நேருவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

0 57
Stalin trichy visit

திருச்சி, ஏப்.8  திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் அமைச்சர் நேருவுக்கு வாழ்த்து சொன்ன மழலைகள்- வாகனத்தில் ஏற்றி உதயசூரியனுக்கு வாக்கு கேட்ட அமைச்சர்..

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 10 மற்றும் 11 வது வார்டு பகுதிகளில்
உறையூர் பஞ்சவர்ணசாமி கோவில் தெரு, காவேரி நகர், வடிவேல் நகர், டாக்கர் பங்களா, காமாட்சி அம்மன் கோவில் தெரு, அக்ரஹாரம் விண்ணப்பம் தெரு மற்றும் சௌராஷ்டிரா தெரு ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்ற கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..

இந்த பிரச்சாரத்தின் போது, அப்பகுதி குழந்தைகள் அமைச்சருக்குப் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வாழ்த்து தெரிவித்தனர். குழந்தைகளின் அன்பால் நெகிழ்ந்து போன அமைச்சர், அவர்களைத் தூக்கித் தனது பிரச்சார வாகனத்திலேயே ஏற்றிக்கொண்டார். குழந்தைகளை அணைத்தபடி, “உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்” எனப் பொதுமக்களிடம் அவர் வாக்கு சேகரித்த விதம் அங்கிருந்தவர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அப்போது அமைச்சர் நேருவின் இந்த செயலை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் கண்டி தங்களது குழந்தைகளை அவரிடம் கொடுத்து மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்துக்கொண்டு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
அமைச்சரின் வருகையை முன்னிட்டு, அப்பகுதி மக்கள் சாலை முழுவதும் வண்ணமயமான கோலமிட்டு, அதில் அமைச்சர் அவர்களே வருக! வருக என அன்புடன் எழுதி அவரை வரவேற்றனர்.
வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், பொதுமக்கள் மலர் தூவியும் அமைச்சருக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

இந்த பிரச்சாரத்தின் போது மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.