வணிக சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து முசிறியில் இடதுசாரிகள், விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

0 19
Stalin trichy visit

திருச்சி, மே 8  முசிறி கைகாட்டியில் ஒன்றிய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டனி கட்சிகள் கண்டண ஆர்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும்,  வணிக சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் முசிறி கைகாட்டியில் நேற்று மாலை சிபிஐ(எம்), சிபிஐ, விசிக மற்றும் சிபிஐ(எம்எல்) லிபரேசன் ஆகிய கட்சிகள் ஒருங்கிணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

ஒன்றிய பாஜக அரசு வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியதைக் கண்டித்தும், இந்திய ரயில்வே துறையில் 29 ஆயிரம் பணியிடங்களை ரத்து செய்துள்ளதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முசிறி சட்டமன்றத் தொகுதி மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன், சிபிஐ(எம்) முசிறி ஒன்றியச் செயலாளர் அசோக் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஐ(எம்) முசிறி ஒன்றியக் குழு உறுப்பினர் தோழர் கிருஷ்ணன் வரவேற்றார்.
விசிக மாவட்டத் துணைச் செயலாளர்கள் உலக முதல்வன், இளையராஜா, செல்ல பெருமாள் மற்றும் சிபிஐ(எம்) துறையூர் ஒன்றியச் செயலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முக்கிய நிர்வாகிகள் பாண்டியன், முத்துக்குமார், முருகேசன், தொட்டியம் ஒன்றியச் செயலாளர் சதீஷ்குமார், வீர விஜயன், பாலசுப்பிரமணியன்சிபிஐ(எம்) தரப்பில் சுப்பிரமணி, தர்மலிங்கம், ஆகியோரும், விசிக தரப்பில் விடுதலை வேந்தன், தனக்குமார், கணபதி, சந்திரசேகரன், உள்ளிட்ட ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இறுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தா.பேட்டை ஒன்றியச் செயலாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.

 

Leave A Reply

Your email address will not be published.