தமிழக ஆளுநரை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

0 102
Stalin trichy visit

திருச்சி, மே 8  மத்திய பாஜக அரசு மற்றும் தமிழக ஆளுநரை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க கூடாது என்ற நோக்கத்துடன் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசு மற்றும் தமிழக ஆளுநரை கண்டித்து திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ், வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு, மத்திய பாஜக அரசு மற்றும் தமிழக ஆளுநரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.