மன உளைச்சலில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

0 12
Stalin trichy visit

திருச்சி, மே 8 திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த இனாம் ரெட்டியப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் தும்மாயி அம்மாள் (75). இவரது கணவர் ரங்கசாமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இதனால் தும்மாயி அம்மாள் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. மேலும் குடும்பப் பிரச்சினைகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் விரக்தியடைந்த அவர், நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த வையம்பட்டி போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.