மணப்பாறை அருகே கட்டிட கூலித்தொழிலாளி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

0 13
Stalin trichy visit

மணப்பாறை அருகே மர்மமான முறையில் கட்டிட கூலித்தொழிலாளி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வடுகபட்டி அருகே மணப்பாறை – துவரங்குறிச்சி சாலையோரம் உள்ள பாலைமரத்தில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கியபடி அமர்ந்த நிலையில் இருந்துள்ளார். அவ்வழியே சென்ற பொதுமக்கள் உடனடியாக மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கில் தொங்கிய முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் அருகே கிடந்த பையை பரிசோதித்தபோது அதிலிருந்த ஆதார் அட்டையில் அவர் பெயர் நடராஜன் (வயது 54) விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக மணப்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடதாதியதில் அவர் மணப்பாறையில் தங்கி கட்டிட பணிகளில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்ததும் தீபாவளிக்கு சொந்த ஊருக்குச் சென்றவர் என்பது தெரியவந்தது. அவர் ஏன் தூக்கில் தொங்கினார் எனவும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.