“தாடிமுளைத்த நெடும்பனை” நூல் அறிமுகம் – ஆய்வரங்கம்
ஈனில் இலக்கிய அமைப்பு சார்பில் பேராசிரியர் சதீஷ் குமரன் எழுதிய கவிதை நூலான “தாடி முளைத்த நெடும்பனை ” நூல் குறித்த அறிமுகம் மற்றும் ஆய்வரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கவிஞர் கோ. கலியமூர்த்தி தலைமை வகித்து உரையாற்றினார். தொடர்ந்து பாரதி கலைக்குழு காந்தியின் பாடலுடன் நிகழ்வு தொடங்கியது. சட்டக் கல்லூரி மாணவர்கள் ஹரிஹரன் வீரப்பன், செல்வி சுபஸ்ரீ செல்வி சண்முகவள்ளி, செல்வி. நித்யா மற்றும் சுஜாதா சஞ்சய் குமார் ஆகியோர் ஜாதியம், பெண்ணியம், சமத்துவம், காதல், சமூகம் என பல்வேறு தலைப்புகளில் அறிமுகம் மற்றும் ஆய்வுரை நிகழ்த்தினார்கள்.
கௌரா பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் ஜெய்கணேஷ் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்வை ஈனில் இலக்கிய அமைப்பின் நிறுவனர் சிறார் எழுத்தாளர் சங்கச் செயல்பாட்டாளர் எழுத்தாளர் கதை சொல்லி கார்த்திகா கவின் குமார் தொகுத்து வழங்கி ஒருங்கிணைத்தார். கவிஞர் சதீஷ் குமரன் ஏற்புரைவழங்கினார்.
நிறைவாக கவிஞர் கலியமூர்த்தி ஒரு அபாரமான சமகாலத்திற்கு தேவையான பின் உண்மைத்துவம் எனும் இன்றைய நவீன உலகில் நிகழ்ந்துவரும் கோட்பாடுகளை சொல்லி நாம் எந்த திசையை நோக்கி நகர வேண்டும் எந்தச் சூழலில் இருந்தாலும் நம் எத்தகைய நெஞ்சுரத்தோடு ஆக்கத்துடன் அச்சமின்றி அறிவுப் பூர்வமாய் செயல்பட வேண்டிய செயலூக்கத்தை வழங்கினார்.
இந்நிகழ்விற்கு பெரம்பலூர் கவிஞர் தோழர் அகவி மற்றும் அங்குசம் யாவரும் கேளீர் பொறுப்பாசிரியர் முனைவர் திருமலை நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவாக செல்வி சாய் மக .ஸ்ரீ மற்றும் சஷ்டிகா நன்றி கூறினர்.