மணப்பாறைக்கு வந்த த.வெ.க. எம்.எம்.ஏ கதிரவனுக்கு உற்சாக வரவேற்பு

0 74
Stalin trichy visit

திருச்சி, மே 15 மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளராக களம் கண்ட ஆர்.கதிரவன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று
மணப்பாறைக்கு வருகை புரிந்தார் அவருக்கு அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மேள தாளங்கள் முழங்க மாலைகள் அணிவித்தும், உற்சாக வரவேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளராக களம் கண்ட ஆர்.கதிரவன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று சட்டமன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட நிலையில் இன்று மணப்பாறைக்கு வருகை புரிந்தார். அவருக்கு அவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மேள தாளங்கள் முழங்க மாலைகள் அணிவித்தும், பொன்னாடைகள் போர்த்தியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அதனைத் தொடர்ந்து மும்மதங்களைச் சேர்ந்த ஆலயங்களுக்கு கட்சி நிர்வாகிகளுடன் சென்று வழிபாடு மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வாகனத்தின் மேல் கை கூப்பியவாறு ஊர்வலமாக சென்று ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு கட்சி நிர்வாகிகள் புடை சூழ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.