சி.பி.ஐ இயக்குநரின் பதவி நீட்டிப்பை கண்டித்தும், – நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, மே 15 சிபிஐ இயக்குநருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியது மற்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்காக சி.பி.ஐ. இயக்குநர் பிரவீன்சூட் அவர்களுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பை வழங்கிய மற்றும் நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசே தேர்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்க மறுக்கிற மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில் மாவட்ட பொருளாளர் முரளி முன்னிலையில் அருணாசல மன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் புல்லட் ராஜா, ஷேக்தாவுத், முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகரன், ஆராய்ச்சி பிரிவு மாநில பொதுசெயலாளர் பாண்டியன், கோட்டத் தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, திருவானைக்கோவில் தர்மேஷ், மார்க்கெட் பகதூர்ஷா, ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், ஏர்போர்ட் கனகராஜ், மணிவேல் அண்ணாதுரை, தில்லைநகர் ராகவேந்திரன், புத்தூர் மலர் வெங்கடேஷ், பொன்மலை பாலு, அணி தலைவர்கள் மகிலா காங்கிரஸ் அஞ்சு, ஷீலாசெளஸ், கலைப் பிரிவு அருள், சுப்புராஜ், மனித உரிமை பதிவு எஸ் ஆர் ஆறுமுகம், விவசாய பிரிவு அண்ணாதுரை, அமைப்புசாரா பிரிவு மகேந்திரன், தகவல் அறியும் உரிமை சட்டம் பிரபாகரன், ஊடகப்பிரிவு செந்தில்,மாணவர் காங்கிரஸ் நரேன், சிறும்பான்மை பிரிவு பஜார் மொய்தின், வார்டு நிர்வாகிகள் நிர்வாகிகள் மூர்த்தி, நித்தியானந்தம், சம்பத், சையத், தியாகி ராஜா, சுப்புராஜ், பத்மா, மும்தாஜ், விஜி, கண்ணன், சரவணன், ரவி சுந்தரம் மற்றும் பல நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.