திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்
அதிமுகவின் திருச்சி மாவட்ட முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, தங்களைக் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டுள்ளனர்.
திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில், அதிமுக மாவட்ட கழக துணைச் செயலாளர் பத்மநாபன், ஜங்ஷன் பகுதி கழகச் செயலாளர் நாகநாதர் பாண்டியன், மற்றும் உறையூர் பகுதி கழகச் செயலாளர் பூபதி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் வருகை தந்தனர். அங்கு தமிழக வெற்றி கழகத்தின் டெல்டா மண்டல பொறுப்பாளர் கு. ப. கிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து, தங்களை முறைப்படி கட்சியில் இணைத்துக் கொண்டனர். இவர்களுடன் 10-க்கும் மேற்பட்ட முக்கிய அதிமுகவினரும் தவெகவில் இணைந்துள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திருச்சியில் அதிமுகவிலிருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணையும் இந்த சம்பவம், மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.