அரிஸ்டோ ரயில்வே மேம்பாலம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்: துரை வைகோ எம்.பி.பேட்டி
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்:–
திருச்சி மாரிஸ் ரயில்வே மேம்பால பணிகள் விரைவில் நிறைவடைந்து, ஆகஸ்ட் மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும். அரிஸ்டோ ரயில்வே மேம்பாலம் ஜூன் மாதம் இறுதியில் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் மீதம் உள்ள துறைகளுக்கு, எப்போது அமைச்சர்கள் ஒதுக்கப்படுவார்கள் என முதல்வரிடம் தான் கேட்க வேண்டும். அரசு திட்டங்கள் தொடர விரைவில் அமைச்சர்கள் பொறுப்பு வழங்க வேண்டும்.
புதிதாக யார் ஆட்சி அமைத்தாலும் கால அவகாசம் வழங்க வேண்டும். விஜய் பதவியேற்கும் போது கால அவகாசம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பொருளாதார சூழ்நிலையில் பல்வேறு திட்டங்கள் அறிவித்து உள்ளார். அதை எவ்வாறு நிறைவேற்றுவார் என பார்க்க வேண்டும். எனவே 6 மாதம் கழித்து தான் அவரது செயல்பாடுகள் குறித்து கூற முடியும்.
குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை, குதிரை வேகத்தில் அரசு செயல்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். அதன் படி செயல்படுவார் என எதிர்பார்க்கிறோம். தவெக அரசுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுகவில் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அதற்கான காரணத்தையும் அவர்கள கூறி உள்ளனர். அதிமுகவில் நடப்பது உட்கட்சி பிரச்சனை இது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
டிடிவி தினகரன் குதிரை பேரம் என கூறி உள்ளார். அது அவருடைய கருத்து
விஜய் 140 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மேல் ஆதரவு வைத்துள்ளார்.
மாத உதவித்தொகை ₹.2500 படிப்படியாக வழங்குவோம் என முதல்வர் விஜய் உள்ளார். அவர் நிறைவேற்றுவார் என நம்பிக்கை உள்ளது. நிறைவேற்றவில்லை என்றால் நாங்கள் கேள்வி கேட்போம்.
விஜய் முதல்வர் ஆக 100 சதவீதம் சினிமா தான் காரணம் என ரஜினிகாந்த் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு?
அது சூப்பர் ஸ்டாரின் கருத்து. என்னை பொறுத்தவரை மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும். அதை சிறுமைப்படுத்த கூடாது என்றார்.
CBSC மும்மொழி குறித்த கேள்விக்கு?
தமிழ்நாட்டிற்கு இருமொழி கொள்கை தான் அவசியம். தமிழர்கள்
உலகத்தில் பல்வேறு நாடுகளில் சிறந்து விளங்க காரணம் இருமொழி கொள்கை. நாம் இந்திக்கு எதிரானவர்கள் கிடையாது.
மொழி திணிப்பிற்கு எதிரானவர்கள் நாங்கள் என தெரிவித்தார்.
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு?
திருச்சி கிழக்கு தொகுதியில் கடந்த முறை திமுக போட்டியிட்டுள்ளதால், நாங்கள் அந்த தொகுதியை கேட்பது, போட்டியிடுவது முறையல்ல என தெரிவித்தார்.