திருச்சி விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

0 100
Stalin trichy visit

திருச்சி விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு திமுக தலைவர், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் நேற்று வருகை தந்தார். அவருடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் புறப்பட்டு சென்றனர். திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், பாராளுமன்ற ராசா, அருண் நேரு, உள்ளிட்ட திமுக தொண்டர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்குப் பின்னர் முதல் முறையாக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.