நீட் தேர்வு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
திருச்சி மே 18 நீக்கப்பட்ட வரிகளை சேர்த்து வந்தே மாதரம் அரங்கேற்றி இருக்கிறார்கள் இது மதசார்பின்மைக்கு முரணானது – திருச்சி விமான நிலையத்தில் வைகோ பேட்டி
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்தார்.விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
தஞ்சை மண்டலத்தில் இளைஞர் மாவட்ட காங்கிரஸில் செயலாளராக இருந்து தஞ்சை மாவட்ட செயலாளராகி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தஞ்சை மாவட்டத்தில் கல்லூரி ஆரம்பித்து ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசமாக படிப்பை வழங்கி லட்சக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய துளசி ஐயா வாண்டையாரின் புகழ் விழா நாளை நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க அதற்காக தஞ்சாவூர் செல்கிறேன்.
நீட் தேர்வு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வு கேள்வித்தாள் வெளியான பிரச்சனையில் 22 லட்சம் மாணவர்கள் அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
இதற்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியில் இருந்து விலக வேண்டும்.
P.M ஸ்ரீ திட்டம் என்று மும்மொழி திட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டுவந்து திணிப்பதற்கு மத்திய அரசு முடிவு எடுத்திருக்கிறது.
1967இல் முதலமைச்சராக பொறுப்பேற்ற அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பி மறைவதற்கு சில நாட்களுக்கு முன்பு
தமிழ்நாட்டில் ஹிந்திக்கு இடமில்லை தமிழும் ஆங்கிலமும் தான் என்று நாம் பிரகடனம் செய்திருக்கிறோம் வரும் காலத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி இதை மாற்ற முடியாது என சொன்னார்.
இன்றைய தமிழக அரசுக்கு இன்றைய முதலமைச்சர் ஜோசப்விஜய்க்கும் இதை நினைவூட்டி இதுவரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஸ்டாலின் அரசு மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை அதே நிலைப்பாட்டை விட்டுவிடக்கூடாது விஜய் அரசும் அதற்கு இடம் கொடுக்கலாகாது.
இனி நடைபெறுகிற விழாக்களில் தமிழ் தாய் வாழ்த்து தான் முதலில் ஒலிக்க வேண்டும், அதற்கு பிறகு தேசிய கீதம் ஒலிக்கலாம். அதற்குப் பிறகு வந்தே மாதரம் என்பது அதில் இருக்கக்கூடிய சில வரிகள் சிறுபான்மை மக்களை மனதை மிகவும் புண்படுத்த இருப்பதால் இந்த வரிகளை அகற்ற வேண்டும் என்று நேரு காலத்திலேயே முடிவெடுக்கப்பட்டது அப்பொழுது நீக்கப்பட்ட வரிகளை சேர்த்து வந்தே மாதரம் அரங்கேற்றி இருக்கிறார்கள் இது மதசார்பின்மைக்கு முரணானது இந்த இந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் தமிழக அரசு இதே நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
பல்வேறு வாக்குறுதிகளை முதல்வர் அறிவுத்திருந்தார் ஆனால் திமுக ஆட்சி கொடுத்தது போல மகளிருக்கு ஆயிரம் ரூபாய் தான் கொடுத்திருக்கிறார் என்ற கேள்விக்கு கொஞ்சம் பொறுத்து இருந்து பார்ப்போம். வாக்குறுதிகளை அவர் நிறைவேற்ற வேண்டும் நிறைவேற்றுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பல்வேறு கேள்விகளை கேட்கிறார்கள் ஆனால் முதல்வர் எக்ஸ் தளத்தில்தான் பதில் கூறுகிறார் என்ற கேள்விக்கு இப்போதுதான் புதிதாக சட்டசபைக்குள்ளே வந்திருக்கிறார். அனுபவம் இல்லை அதனால அப்படி இருக்கலாம் அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என தெரிவித்தார்
மாநில நிர்வாகி மருத்துவர் ரெகையா பேகம், மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு மணவை தமிழ்மாணிக்கம், சேரன் ஆகியோர் உடன் இருந்தனர்.