காவல்துறையால் தேடப்பட்டு வந்த ரவுடி மர்ம சாவு
திருச்சி, ஆக.19 திருச்சி, ஆக.19 திருச்சியில் குற்ற வழக்கு களில் தேடப்பட்டு வந்த ரவுடி ரெயில் தண்டவாளத்தில் மர்மமான முறை யில் இறந்து கிடந்தார்.
திருச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கே. கே.நகர் உடையான்பட்டி ரெயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட் டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் ஆட்டோவில் கஞ்சா பொட்டலங்கள் தெறத்து எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் ஆட்டோவை ஓட்டி வந்தவரை பிடித்து விசா ரித்தபோது அவர், திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கொல்லாங்குளம் பாரதியார் நகரை சேர்ந்த அப்புச்சி என்ற அபு. தாகிர் (வயது 38) என தெரிய வந்தது. இதையடுத்து அபுதாகிர் ஆட்டோவில் இருந்து இறங்கி போலீசாரை ஏமாற்றி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர் போலீசார் ஆட்டோவை கைப்பற்றி தப்பி ஓடிய அபுதாகிரை தேடி வந்தனர்.
இதற்கிடையில் அபுதாகிர், எடமலைப்பட்டிபுதூர் அரசு காலனியை சேர்ந்த பிரபு (34) என்பவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட் டார். இதனால் கஞ்சா கடத் தல், அரிவாள் வெட்டு சம்ப வங்கள் தொடர்பாக போலீ சார் அபுதாகிரை தேடி வந்த னர். மேலும் அபுதாகிர் ரவுடி பட்டியலில் உள்ளார்.
இந்நிலையில் திருச்சி அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவ ரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் , இறந்தவர் போலீசி டம் இருந்து தப்பி ஓடிய ரவுடி அபுதாகிர் என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.