பெண்ணை பலாத்காரம் செய்த முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை
திருச்சி, ஆக.19 ஆடு மேய்க்க சென்ற பெண்ணை பலாத்காரம் செய்த முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண் டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா மணிகண்டம் அருவாக்குடி பகுதியை சேர்ந்த செல்லை (வயது 55). இவருக்கு தெரிந்த 28 வயதுடைய பெண் ஒருவர் ஆடு மேய்க்க சென்றபோது, ஸ்ரீரங்கம் கே.கள்ளிக்குடியை சேர்ந்த சங்கபிள்ளை (72) என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு ஆசைவார்த்தை கூறிஅந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் முத் துக்கண்ணுபுகார்.அளித்தார். அதன்பேரில் 2022-ம் ஆண்டு மார்ச் 12-ந் தேதி போலீசார் வழக்குப்பதிந்து சங்கபிள் ளையை கைது செய்தனர்.
இந்த வழக்கானது திருச்சி பெற்று வந்தது. அரசு தரப்பு வக்கீல் சுமதி ஆஜராகி வாதா டினார். இந்தவழக்கில் நீதிபதி சண்முகபிரியா நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட சங்கப்பிள்ளையாவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயி ரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறி னால் மேலும் 5 மாத சிறை தண்டையும் வழங்கி தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர வழக்கை விரைந்து முடித்த ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ்நிலைய முன்னாள் இன்ஸ்பெக்டர் அனுபல்லவி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் திறம்பட பணியாற்றிய நீதிமன்ற காவலர் நித்யா காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் பாராட்டு தெரிவித்தார்.