பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் : துரை வைகோ எம்.பி. பேட்டி

0 37
Stalin trichy visit

திருச்சி, மே 20  திருச்சி உழவர் சந்தையில் உள்ள மதிமுக அலுவலகத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைக்கும் பேட்டி அளித்தார். அதில்

திருச்சி மாநகர் மாரீஸ் மேம்பாலம், அரிஸ்டோ மேம்பாலம் பணிகள்
காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. பணிகள் நிலை, எப்போதும் முடியும் என ஆய்வு செய்தேன்.

2025 மார்ச் மாதம் மாரீஸ் மேம்பாலம் பணிகள் துவங்க ரயில்வே மேம்பாலம் அகற்றப்பட்டு 3 மாதத்தில் அகற்றப்பட்டு பணிகள் துவங்கியது. செப்டம்பர் இறுதிக்குள் 40 நாட்கள் அவகாசம் கேட்டு உள்ளனர்.  இரும்பு தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்தேன். மாநகராட்சி ,ரயில்வே துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

அரிஸ்டோ மேம்பாலம் டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் 5 மாதம் அவகாசத்தில் டிசம்பர் பணிகள் முடிக்கப்படும் என கூறி உள்ளனர். ரயில்வே துறை, மின்வாரியம், நெடுஞ்சாலை துறை உடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அதற்கான தீர்வு கிடைத்துள்ளது. பஞ்சபூர் கிராப்பட்டி உயர்மட்ட பலம் அடுத்த வருடம் 2027 ஜனவரி மாதம் பணிகள் முடியும் என கூறி உள்ளனர். அங்கு நிலம் கையகப்படுத்துவத்தில் பிரச்சனை உள்ளது. ரயில்வே நிர்வாகத்துடன் NOC பெற வேண்டிய நிலை உள்ளது. மரீஸ், அறிஸ்டோ பாலம் தாமதத்திற்கு கேஸ் தட்டுப்பாடு, மற்றும் தேர்தல் தான் காரணம் என கூறியுள்ளார்.

திருச்சி-திருப்பதி பகல் நேர சேவை கிடைத்துள்ளது. இதற்கு ஒன்றிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் திருச்சி விமான நிலையம் ஓடுதலம் விரிவாக்கம் செய்ய வேண்டும். நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு அடைந்துள்ளது. விரிவாக்கம் பணிக்கு 350 கோடி திட்ட அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. அதற்கான நிதி எப்போது கிடைக்கும் என தெரியவில்லை. நிலத்தின் மண் தன்மை மற்ற வேண்டும் என விமான நிலையத்திற்கு கோரிக்கை விடுத்தும் அது மற்ற இயலாத சூழ்நிலை உள்ளது.

பொருளாதார நெருக்கடி வரலாம் …

கச்சா என்னை கிடைக்கவில்லை. இதனால் கேஸ் விலை உயர்ந்துள்ளது. கமர்சியல் கேஸ் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். மத்திய அரசு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதற்கான கடமை மத்திய அரசுக்கு உள்ளது. ராகுல் காந்தி சொல்வது உண்மைதான். அதற்கு உரிய தீர்வு கொடுக்க வேண்டும்.

டோல் குறிப்பிட்ட வருடம்தான் இயங்க வேண்டும். அதனை வசூல் செய்து உள்ளனர். அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டும்.

கரூர் திருச்சி நெடுஞ்சாலை விரிவாக்கத்தில்   சரியான பதில் கிடைக்கவில்லை.
அங்கு விரிவாக்கம் செய்ய இயலாது. புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜி கார்னர் சுரங்கப்பாதை அமைக்க 15 வருட கோரிக்கை நிறைவேறி உள்ளது. 8 ஏக்கர் நிலத்தை 95 கோடிக்கு கொடுத்துள்ளனர். சுரங்க பாதை அமைக்க மக்கள் ஒத்துழைப்பு இல்லை. நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சனை உள்ளது.

மாருதி நகர், சஞ்சீவி நகர் சுரங்கப்பாதை பணிக்கு 150 கோடி ஒதுக்கி பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.