அம்மா உணவகத்தை முறையாக பராமரிக்காத ஊழியர்கள் மீது நடவடிக்கை : மணப்பாறை எம்.எல்.ஏ. எச்சரிக்கை

0 434
Stalin trichy visit

திருச்சி, மே 20 அம்மா உணவகத்தை முறையாக பராமரிக்காத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மணப்பாறை எம்.எல்.ஏ. கதிரவன் எச்சரிக்கை விடுத்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ .ஜெயலலிதாவால் அவர்களால் துவங்கப்பட்டு அம்மா உணவகம் செயல்பட்டு வந்தது

தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் தரமான உணவு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்

இந்நிலையில் மணப்பாறையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்

ஆய்வின்போது நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர் அப்போது அம்மா உணவகத்தில் பணியில் இருந்த மகளிர் சுய உதவிக் குழு பெண்களிடம் உணவகங்களில் உள்ள குறை நிறைகளை கேட்டரிந்தார்

அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்ட எம்எல்ஏ கதிரவன் சமையல் கூடம் மற்றும் ஸ்டோர் ரூம்களை பார்வையிட்டார். அப்போது ஸ்டோர் ரூமீல் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்த போது கரப்பான் பூச்சிகள் இருந்ததை கண்டு பணியாளர்களிடம் ஏன் இப்படி சுத்தம் இல்லாமல் உள்ளது உடனடியாக சுத்தம் செய்து மக்களுக்கு வழங்கும் உணவுகளில் தரம் இல்லை எனில் உங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்

மேலும், சமையல் கூடத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ, அரசு விதிகளுக்கு மாறாக அம்மா உணவகத்தில் தோசை கற்களில் தோசை தயாரிக்க அனுமதி இல்லாத போது தோசை சுடுவது ஏன் என்று கேள்வி கேட்டு இதுபோன்று அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்டால் உங்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன் என மீண்டும் எச்சரித்தார்.

பின்னர், அம்மா உணவகங்களில் உணவருந்த வந்த பொதுமக்களிடம் உணவுகள் தரம் குறித்தும் சரியான முறையில் உங்களுக்கு சேவை செய்கிறார்களா என்பதையும் கேட்டு எந்தக் குறையாக இருந்தாலும் அம்மா உணவகம் பின்பு தான் எம்எல்ஏ அலுவலகம் உள்ளது உடனடியாக புகார் கொடுங்கள் உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறினார்

 

Leave A Reply

Your email address will not be published.