பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1351வது சதயவிழா : அதிமுக மாவட்ட செயலாளர்கள் அழைப்பு

0 83
Stalin trichy visit

திருச்சி மே 22 திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் ஆவின் சேர்மன் என்ஜினியர் கார்த்திகேயன், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அரசு கொறடா மனோகரன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் யோகநாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் தமிழக முதல்வர் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க திருச்சி ஒத்தக்கடை அருகில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1351 வது சதய விழா முன்னிட்டு நாளை (23 ந் தேதி) காலை 10 மணி அளவில் அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி ஒருங்கிணைந்த அதிமுக மாவட்டம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. மேற்கண்ட நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள்,அணி நிர்வாகிகள்,நகர ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், செயல் வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் 3 மாவட்ட செயலாளர்களும் கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.