உரம்விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

0 16
Stalin trichy visit

திருச்சி, மே 26  திருச்சி – தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சார்பில்  உரம்  விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி ரயில் நிலையம் அருகே திருச்சி மாநகர் மற்றும் புறநகர் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொருளாளர் அயிலை சிவசூரியன் தலைமை வகித்தார். இதில் மத்தியில் பிஜேபி ஆட்சி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு விலைவாசியை குறைப்போம் என வாக்குறுதி அனைத்து வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தனர் . ஆனால் இந்நாள் வரை பெட்ரோல் டீசல் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் பொது மக்களுக்கு தேவையான அத்திவாசியை பொருட்களின் விலை அதிகமாவதாகவும் மேலும் விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் யூரியா விலையும் அதிகமாக செல்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறினர் மேலும் கூட்டுறவு வங்கிகளின் வாங்கிய விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை  எழுப்பினர்

Leave A Reply

Your email address will not be published.