லால்குடி விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா

0 41
Stalin trichy visit

திருச்சி, மே 29  நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு கண்டுணர்வு சுற்றுலா

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரம் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து மாநிலத்திற்கு உள்ளான விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா இனத்தின் கீழ் இரண்டு நாட்கள் நடைபெற்றது.இதில் ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் உதவி பேராசிரியர் முத்துக்குமார் ராஜா பேசுகையில் புதிய நெல் ரகங்கள் , நெல் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, களை மேலாண்மை பற்றி விரிவாக விளக்கி கூறினார். அதன் பின்பு ஒருங்கிணைந்த பண்ணையம் கடைபிடிக்கப்படும் தொழில் நுட்பங்கள் பற்றி அருள் ஆனந்த் உதவி பேராசிரியர் அவர்கள் விரிவாக விளக்கி கூறினார்.

இரண்டாம் நாள் இயற்கை விவசாயி கும்பலிங்கம் அவர்கள் நெல் சாகுபடியில் பாரம்பரிய நெல் ரகங்கள் பராமரிப்பு இயற்கை இடு பொருட்கள் தயார் செய்தல் தயார் செய்தல் , நெல்லில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை வாய்ப்பு பற்றி விரிவாக விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். மேலும் நெல் சாகுபடியில் தக்கை பூண்டு, சணப்பை, ஒருங்கிணைந்த கலை மேலாண்மை பற்றி பேராசிரியர் மற்றும் தலைவர் பார்த்திபன் அவர்கள் விவசாயிகளுக்கு விரிவாக விளக்கி கூறினார். மேலும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் காட்டுத் தோட்டத்தில் விவசாயத்தில் கடைபிடிக்கப்படும் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சி திடல்கள் பற்றி அழைத்துச் சென்று மாற்று பயிர் சாகுபடி ஒருங்கிணைந்த பண்ணையம், அசோலா வளர்ப்பு மீன் வளர்ப்பு, நெல்லில் களை மேலாண்மை உளுந்தில் வளர்ச்சி ஊக்கி பயன்படுத்துதல் பற்றி விரிவாக பழனிச்சாமி அவர்கள் விவசாய விரிவாக விளக்கிக் கூறினார்.

இந்த சுற்றுலாவில் லால்குடி வட்டாரத்தில் சேர்ந்த பல முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் இதற்கான ஏற்பாட்டினை லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி சத்யபிரியா, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சபரிச்செல்வன்,உதவி தொழில் நுட்ப மேலாளர் கார்த்திக், வேளாண்மை உதவி அலுவலர்கள் லால்குடி வட்டாரம் செய்திருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.