புதிய வாகனங்களின் விலையேற்றம், உதிரி பாகங்கள், இன்சூரன்ஸ் மற்றும் வரிஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் – எர்த் மூவர்ஸ் சங்கத்தினர் கோரிக்கை

0 20
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 2  எர்த் மூவர்ஸ் ​புதிய வாகனங்களின் கடுமையான விலையேற்றம், உதிரி பாகங்கள், இன்சூரன்ஸ் மற்றும் வரிஏற்றத்தை அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் – எர்த் மூவர்ஸ் சங்கத்தினர் கோரிக்கை

​அனைத்து மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ​நலிந்து வரும் எர்த் மூவர்ஸ் தொழிலை மீட்டு, இத்தொழிலை நம்பி உள்ள லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை காத்து, வாடகை உயர்வு செய்திட மாநில அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர் சங்கத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதில்,

​புதிய வாகனங்களின் கடுமையான விலையேற்றம், உதிரி பாகங்கள், இன்சூரன்ஸ் மற்றும் வரிஏற்றத்தை அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். ​Life Tax என்ற புதிய நடைமுறையை முற்றிலும் ரத்து செய்துவிட்டு, பழைய முறையையே மீண்டும் பின்பற்ற வேண்டும். ஒரு ஆண்டிற்கு ரூபாய் 15,000 செலுத்தி வந்த நிலையில், தற்போது Life Tax என்ற பெயரில் 15 வருடத்திற்கு சுமார் 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் சுமார் 65 ஆயிரம் ரூபாய் வரை நேரடியாக பொதுமக்களிடமிருந்தும் உரிமையாளர்களிடமிருந்தும் கொள்ளையடிக்கப்படுகிறது.

​அரசு வேலைகள், அரசு ஒப்பந்த வேலைகள் மற்றும் காண்ட்ராக்ட் முறையில் பணிகளை எடுக்கும் நிறுவனங்கள், 80% சதவீதம் உள்ளூர் வாகனங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கி பணிகளை அளிக்க வேண்டும்.

​அந்தந்த மாவட்டங்களில் உள்ள Construction Equipments வாகனங்களை ஏற்றிச் செல்லும்போது டெலிவரி சலான் (Delivery Challan), E-way bill, ஜிஎஸ்டி (GST) போன்ற ஆவணங்களில் இருந்து உள்ளூர் உரிமையாளர்களுக்கு குறைந்தது 30 கிலோமீட்டர் வரை விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

​பழைய கட்டிட கழிவுகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு முறையான ரசீது இல்லை என்று கூறி, வாகனங்களின் மீது அநியாயமாக அபராதம் விதிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்

​நிதி நிறுவனங்கள் (Finance Companies) மூலம் கடன் பெற்று வாங்கப்பட்ட வாகனங்களை, ஒன்று அல்லது இரண்டு தவணைகள் (EMI) கட்ட தவறினால் கூட, வாகன உரிமையாளருக்கு எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காமல், அடியாட்களை வைத்து வழிப்பறி என்ற பெயரில் நிதி நிறுவனங்கள் வாகனங்களை சட்டவிரோதமாக பறிமுதல் செய்வதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

​தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து எர்த் மூவர்ஸ் வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான பொதுவான வாடகையை நிர்ணயம் செய்துள்ளோம். இந்த கட்டண முறையை அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த உரிமையாளர்களும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
​தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராவல் குவாரிகளையும் (Gravel Quarries) தனியாருக்கு தராமல் அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும்.
​எர்த் மூவர்ஸ் வாகனங்களை பயன்படுத்தி இடங்களை சுத்தம் செய்யும் பொழுது அங்கு ஏற்படும் சட்டரீதியான அல்லது இதர சிக்கல்களுக்கு, அந்த இடத்தின் உரிமையாளரும் வாகனங்களை அழைத்துச் சென்றவருமே முழு பொறுப்பேற்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வாகனங்களையோ, அதன் ஆபரேட்டர்களையோ அல்லது உரிமையாளர்களையோ எந்தவித சட்ட சிக்கல்களுக்கும் உட்படுத்தக் கூடாது என கேட்டுக்கொண்டனர்.

எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி விரைவில் முதல்வரையும் அமைச்சர்களையும் சந்திக்க உள்ளோம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த கட்டமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.