திருச்சி மாநகராட்சி புதிய ஆணையராக வீர பிரதாப் சிங் பொறுப்பேற்பு
திருச்சி, ஜூன் 2 திருச்சி மாநகராட்சியின் 29ஆவது ஆணையராக வீர பிரதாப் சிங் திங்கள் கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த லி. மதுபாலன் பணியிட மாற்றம் செய்யப்பட் டதைத் தொடர்ந்து, தற்போது வீர பிரதாப் சிங் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் இயந்திரப் பொறியியலில் பி.டெக். பட்டம் பெற்றுள்ள இவர், யுபிஎஸ்சி தேர்வெழுதி 2019ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியானார். உளவுத் துறை இணை ஆணையராக இருந்துள்ளார். தமிழக அரசின் பொதுத்துறை துணைச் செயலராக (நெறிமுறை) பதவி வகித்து வந்த இவர், தற்போது திருச்சி மாநகராட்சியின் 29ஆவது ஆணை யராகப் பொறுப்பேற்றுள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், திருச்சி மாநகராட்சி மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை அளித்து பணியாற்று வேன் என்று கூறினார்.