மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைச்சர் எஸ் ரமேஷ் திறந்து வைத்தார்
திருச்சி, ஜூன் 4 மணப்பாறை சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா
அமைச்சர் எஸ் ரமேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ் ரமேஷ் கலந்துகொண்டு சட்டமன்ற அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
மேலும் அமைச்சர் எஸ் ரமேஷ் சட்டமன்ற அலுவலகத்தில் குத்துவிளக்கு ஏற்றினார்.
பின்னர் சட்டமன்ற உறுப்பினர் அறையில் சட்டமன்ற உறுப்பினர் கதிரவனை சட்டமன்ற உறுப்பினர் இருக்கையில் அமர வைத்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்
பின்னர் மாவட்ட மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகளை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் அமைச்சர் எஸ் ரமேஷ்க்கு அறிமுகம் செய்து வைத்தார்
முன்னதாக காலை 7 மணியளவில் முள்ளிப்பாடி சுப்ராயன் அய்யர் அவர்கள் கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மணப்பாறை பள்ளிவாசல் ஹஜ்ரத் முகமது இக்பால் திருக்குர்ஆன் வாசித்து சிறப்பு துவா செய்தார். பின்னர் பைபிள் வாசிக்கப்பட்டு விழா தொடங்கியது அலுவலக திறப்பு விழாவிற்கு வருகை தந்த அரசு அலுவலர்கள் மற்றும் த வெக நிர்வாகிகள் தொண்டர்களுக்கு காலை உணவு ஏற்பாடு செய்திருந்தனர்
சட்டமன்ற அலுவலக திறப்பு விழாவில் மாவட்ட இணை செயலாளர் தினேஷ் மாவட்ட பொருளாளர் ராஜேஷ்வரன் மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு மாவட்ட துணை செயலாளர் கல்பனா மாவட்ட இளைஞரணி அப்துல் சுபான் நிவேசேகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜில்லா குமார் மருங்காபுரி ஒன்றியம் சேகர் வடக்கு வெள்ளைச்சாமி கிழக்கு பாஸ்கர் மேற்கு நல்லதம்பி தெற்கு மணப்பாறை ஒன்றியம் பாண்டியன் தெற்கு சரவணன் வடக்கு மணப்பாறை நகர கழக செயலாளர் தெற்கு திருப்பதி வடக்கு அழகர் மணப்பாறை மத்திய ஒன்றிய செயலாளர் காயாம்பு தெற்கு ஒன்றிய செயலாளர் எம் பி எம் பாண்டியன் வையம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் பார்த்திபன் தெற்கு மத்திய ஒன்றிய செயலாளர் குணசேகரன் பொன்னம்பட்டி பேரூர் கழகம் சக்கர பாண்டியன்
மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜென்ஸி த வெக நிர்வாகி எடத்தெரு நேரு தாஸ் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் எல் எத்திராஜ் தீபா ராஜா ஆர்பர் சுரேஷ் குட்டி ச வரி முத்து உள்ளிட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் அரசு சார்ந்த அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.