திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சிப்பள்ளியில் பெற்றோர்களுக்கு மரக்கன்று வழங்கல்
திருச்சி, ஜுன் 9 திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சிப்பள்ளியில் பெற்றோர்களுக்கு மரக்கன்று வழங்கும் விழா.
அரசுப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்ததைப் பாராட்டி – வாழ்த்தி தண்ணீர் அமைப்பின் சார்பில் செயலாளர் பேராசிரியர் முனைவர் கி.சதீஷ் குமார் 50 நாட்டு மரக்கன்றுகள் சிறுநெல்லி பெரு நெல்லி, கொய்யா, நாவல், மந்தாரை, நீர் மருது புங்கன் மரக் கன்றுகள் வழங்கிச் சிறப்பு செய்தார். நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் பெற்றனர்.