திருச்சியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் காங்கிரஸ் எம்பியுடன், திருவெறும்பூர் த.வெ.க. எம்.எல்.ஏ. வாக்குவாதம்!

0 29
Stalin trichy visit

திருச்சி அக் 5 திருச்சியில்  நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில்  அமைச்சர் ரமேஷ் முன்னிலையில்  காங்கிரஸ் எம்பியுடன், திருவெறும்பூர் த.வெ.க. எம்.எல்.ஏ.  வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி கலையரங்கத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் 242 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் முதலில் குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முதலில் அமைச்சர் ரமேஷ்,குத்துவிளக்கு ஏற்றிவிட்டு கலெக்டர் இடம் வழங்கினார் பிறகு கலெக்டரும் குத்துவிளக்கு ஏற்றிய பிறகு அமைச்சர் ரமேஷ் அந்த மெழுகுவர்த்தியை வாங்கி எம்எல்ஏக்கள் கதிரவன், விக்னேஷ் ஆகியரிடம் வழங்கினார். பிறகு அவர்கள் இரண்டு பேரும் குத்துவிளக்கு ஏற்றிய பிறகு மூன்றாவதாக திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜி குத்துவிளக்கு ஏற்ற அருகில் வந்த போது அமைச்சர் ரமேஷ் அதனை சரியாக கவனிக்காமல் அருகில் நின்ற கிறிஸ்டோபர் திலக் எம் பி யிடம் மெழுகுவர்த்தியை ஏற்ற வழங்கினார்.

இதனை தொடர்ந்து தன்னிடம் மெழுகுவர்த்தியை தராமல் காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக்யிடம் கொடுத்ததால் ஆத்திரமடைந்த திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜி அங்கிருந்த தவெக எம்எல்ஏக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்ற கர்ப்பிணிகளுடன் அமைச்சர் உள்ளிட்ட எம்எல்ஏகள் புகைப்படம் எடுத்துக் கொண்ட போது எனக்கு முக்கியத்துவம் அளிக்க கவில்லை என்று மற்ற 2 எம்எல்ஏ யிடம் நவல்பட்டு விஜி கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு அமைச்சர் ரமேஷ் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார். இதனால் அரங்கத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு நவல்பட்டு விஜி எம்எல்ஏவும், கிறிஸ்டோபர் எம் பி இருவரும் ஒருவருக்கொருவர் கை கொடுத்து பேசிக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.