திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையர்கள் பணியிட மாற்றம்
திருச்சி, ஜூன் 16 திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் நேற்று பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். அதன்படி திருச்சி மாநகர தெற்கு காவல் துணை ஆணையர் சிருஷ்டி சிங், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், திருச்சி மாநகர வடக்கு காவல் துணை ஆணையர் செந்தில்குமார், சென்னை அமலாக்கத்துறை காவல் கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மாற்றாக திருச்சி தெற்கு காவல் துணை ஆணையராக சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் பி. மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி வடக்கு மாநகரக் காவல் துணை ஆணையர் அறிவிக்கப்படவில்லை.
மேலும், காலியாக இருந்த திருச்சி மாநகர தலைமையிடத்து காவல் துணை ஆணையர் பணியிடத்துக்கு தாம்பரம் பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் ஆர்.பொன் கார்த்திக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.