மணப்பாறையில் வெளுத்து வாங்கிய கனமழை : வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி

0 117
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 20 மணப்பாறை அருகே வெளுத்து வாங்கிய கனமழை – வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி

திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் வையம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று மாலை இருள் மேகங்கள் சூழ இடி, மின்னலுடன் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.

தொடர்ந்து கன மழை பெய்து வந்த நிலையில் மணப்பாறை அடுத்த தவள வீரம்பட்டி பகுதியிலும் மழை சுமார் 2 மணி நேரம் வெளுத்து வாங்கியது.இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியது அதன் ஒரு பகுதியாக தவள வீரம்பட்டி பகுதியில் உள்ள பல்வேறு வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அருகில் உள்ள அரசு பள்ளியில் தஞ்சம் புகுந்தனர்.

அதே நேரத்தில் தவள வீரம்பட்டி ஆற்றுப் படுகையில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடத் தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டிருந்தது . எந்தப் பக்கம் திரும்பினாலும் வெள்ள நீர் சூழ்ந்திருந்ததால் கிராம மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர்.
சுமார் 2 மணி நேரம் கொட்டித் தீர்த கனமழையால் அப்பகுதி வெள்ளக்காடாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.