மணப்பாறையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
திருச்சி, ஜூன் 25 மணப்பாறையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் போக்குவரத்து காவல்துறை மற்றும் தனியார் தன்னார்வ அமைப்பு சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 5க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளை அழைத்து வரப்பட்டிருந்தனர். காமராசர் சிலையிலிருந்த பெரியார் சிலை வரை ஊர்வலமாக வந்தனர். அப்போது போதைக்கு நோ வாழ்க்கைக்கு ஓகே, போதை விலகட்டும் – புன்னகை மலரட்டும், போதை அது சாவின் பாதை, இது போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி போதையில்லா வாழ்க்கையே வாழ்வோம், கூலிப் மற்றும் ஹான்ஸ், போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தாமல் வாழ்வோம் என மாணவர்கள் கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர். மாணவர்கள் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.