மணப்பாறை அருகே அடிபட்டு கிடந்த குரங்கை மீட்ட ஆம்புலன்ஸ் உரிமையாளர் : சமூக வலைதளங்களில் பாராட்டு

0 26
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 25 மணப்பாறை அருகே அடிபட்டு கிடந்த குரங்கை மீட்டு ஆம்புலஸ்சில் அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் உரிமையாளர் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே மோர்னிமலை அமைந்துள்ளது. திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள அந்த பகுதியில் குரங்கு ஒன்று அடிபட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து துவரங்குறிச்சியில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் அப்துல்லாவிற்கு தகவல் கொடுத்தனர். அதன்படி ஆம்புலன்ஸ்சை எடுத்துக் கொண்டு விரைந்து சென்ற அவர் உடனே குரங்கை தூக்கி தனது ஆம்புலன்சில் வைத்துக் கொண்டு கால்நடை மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு மருத்துவர்கள் இல்லாத நிலையில் துவரங்குறிச்சி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்த நிலையில் குரங்கிற்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்ததை தொடர்ந்து குரங்கு அங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த குரங்கை உடனடியாக மீட்டு சிகிச்சைக்கு சேர்த்த ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுடன் அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.