சஞ்சீவி நகர் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்

0 133
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 27  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவேரி பாலம் பராமரிப்பு பணிகளுக்காக மூடியதால் 20 கிராம மக்கள் பல கிலோமீட்டர் சுற்றிவரும் சூழ்நிலை

பத்து வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க பலமுறை பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பலனில்லை எனக் கூறி பொதுமக்கள் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறியல் போராட்டம்

திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் தொடரும் சாலை விபத்துக்களை தவிர்க்க சுரங்க பாலம் அல்லது உயர் மட்ட காலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், மத்திய மாநில நெடுஞ்சாலை துறையும் நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது காவிரி பாலத்தை மூடியதால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல கிலோமீட்டர் சுற்றி வரும் சூழல் உள்ளதால், இன்றைய தினம் கிராம மக்கள் காவிரி பாலத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

இதனால் திருச்சி – சென்னை பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது…

Leave A Reply

Your email address will not be published.