முசிறியில் வீடு புகுந்து 50 பவுன் நகைளை திருடி சென்ற மர்மநபர்
திருச்சி, ஜூன் 27 முசிறியில் மாடியில் துணியை காயப்போட்டு விட்டு வருவதற்குள் வீடு புகுந்து 50 பவுன் நகைகளை திருடிய மர்மநபர் களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
முசிறி தட்டார தெருவை சேர்ந்தவர் சர்தார் (வயது 65). இவரது மனைவி சகிலா (58). நேற்று மாலை சர்தார் மாடியில் துணிகளை காய வைப்பதற் காக சென்றார். ஷகிலா தொழு கையில் கலந்து கொள்ள வெளியே வந்திருந்தார்.
இந்நிலையில் சர்தார் துணியை காயபோட்டுவிட்டு மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது, பீரோ திறந்து கிடந்தை கண்டு சர்தார் அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவில் இருந்த 50 பவுன் நகை திருடப்பட்டு இருந்தது. சர்தார் மாடிக்கு சென்று. திரும்ப வருவதற்குள் மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து இந்த துணிகர திருட்டில் ஈடு பட்டுள்ளனர். இது குறித்து சர் தார் முசிறி போலீஸ் நிலையத் தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துக் குமார். இன்ஸ்பெக்டர் செல்ல துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடங் களை பதிவு செய்தனர். மேலும் நகைகளை திருட்டி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.