திருச்சியில் 16 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் வன உயிரியல் பூங்கா

0 15
Stalin trichy visit

திருச்சியில் 16 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் வன உயிரியல் பூங்கா : மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

திருச்சி மாநகரில்  முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று  திருச்சி-கரூர் சாலையில் குடமுருட்டி சோதனைச்சாவடி அருகே அமைக்கப்பட்ட பறவைகள் பூங்கா.  கடந்த சில ஆண்டுகளுக்கு  முன்பு திறக்கப்பட்ட இந்த பூங்காவுக்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. குடும்ப குடும்பமாக சென்று பறவைகள் பூங்காவை ரசித்து வருகின்றனர்.

வனவிலங்குகள், பறவைகளை பார்ப்பதில் பொதுமக்களுக்கு எப்போதும் ஆர்வம் அதிகமாக இருக்கும்.  அந்தவகையில் தான் கடந்த 2010-ம் ஆண்டிலேயே திருச்சிக்கு வன உயிரியல் பூங்கா கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது  வனத்துறை அமைச்சராக  இருந்த என்.செல்வராஜ், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் சுமார் 75 ஏக்கரில் வனஉயிரியல் பூங்கா அமைக்கும் திட்டத்தை அறிவித்தார்.

இதனை  முதல்கட்டமாக சுற்றுச்சுவர் கட்டுவதுகள் உள்ளிட்ட ஒருசில வேலைகள் நடைபெற்றன. எந்தவொரு பூங்கா அமைப்பதாக இருந்தாலும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் ஒப்புதல் கட்டாயம் பெற வேண்டும். இதற்காக 2009 ஆம் ஆண்டு வழிகாட்டுதல்படி ஒரு திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டது. மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது. அதன்பிறகு 2011ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சி அமைந்தடவுன் அந்த திட்டம் சுமார் 10 ஆண்டுகளாக அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

. பின்னர் 2021-ம் ஆண்டில் தி.மு.க. ஆட் சிக்கு வந்த பிறகு, இந்த திட்டத்தை செயல்ப டுத்த முனைப்பு காட்டப்பட்டது. அதன்படி திருச்சி வனஉயிரியல் பூங்காவுக்கு புதிய திட்ட அறிக்கை மற்றும் வரைபடம் தயாரிக் கப்பட்டு மத்திய உயிரியல் பூங்கா ஆணை யத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட் டது. இதற்கான திருத்திய திட்ட மதிப்பீடு ரூ.120 கோடி செலவாகும் என கணக்கிடப்பட் டுள்ளது.

மேலும், புதிய திட்ட அறிக்கை மற்றும் வரைபடத்தில், விலங்குகளின் இருப்பிடத்து யின் பாதுகாப்புகள், அவற்றின் அவற்றின் பாதுகாப்பு, பார்வையாளர்க பாதுகாப்பு, பூங்காவிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வெளியேறும் வழிகள் அனைத்து விவரங்களும் இடம் பெற்றன.  பூங்காவில் விலங்குகளுக்கு தண்ணீர்  மற்றும் உணவுத்தேவையை பூர்த்தி  செய்வதற்கான வசதிகள்  அனைத்தும் கவனமாக திட்டமிடப்பட்டது.   இந்த திட்டத்துக்கு மத்திய ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மாநில அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்த திட்டம் திருச்சியின் சுற்றுலா வளர்ச்சிக்கும், வனவிலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பெரிதும் உதவும்.

கிட்டத்தட்ட 16 ஆண்டுக ளாக காத்திருக்கும் இந்த திட்டத்துக்கு எப்போது மத்திய உயிரியல் பூங்காவின் ஒப்புதல்கிடைத்து, மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டை பெற்று செயல்பாட்டுக்கு வரும் என தெரியவில்லை. தற்போது தமிழகத்தில் ஆட்சிமாற் றம் ஏற்பட்டு த.வெ.க. அரசு ஆட்சி அமைத் துள்ளசூழ்நிலையில், தமிழக முதல்-அமைச் சர் விஜய் திருச்சியில் வனஉயிரியல் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.

அதிகாரி என்ன சொல்கிறார்? திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரி
ஒருவர் கூறும்போது, “திருச்சியில் வன உயியல் பூங்கா அமைக்க திருத்தியதிட்ட மதிப்பீடுடன் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் சுட்டிக்காட் டிய சில நிபந்தனைகள் சரி செய்யப்பட் டுள்ளது. ஆனாலும் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இறுதி ஒப்புதல் கிடைத்தவுடன் திருச்சியில் நிலவும் தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப விலங்குகள் தேர்வு செய்யப்படும். அதன்பிறகு மற்ற உள் கட்டமைப்பு பணிகளை மாநில அரசு நிதி ஒதுக்கீடு அளித்த பிறகு தான் மேற் கொள்ள முடியும். பகுதி, பகுதியாக நிதி ஒதுக்கீடு செய்தாலும் திட்டத்தை நிறை வேற்றி விடலாம். அவ்வாறு வனஉயிரியல் பூங்கா செயல்பாட்டுக்கு வந்தால் திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்க ளுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.